இந்தோனேசியா எரிமலை வெடிப்பு:தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Author: Udhayakumar Raman
7 December 2021, 11:06 pm
Quick Share

இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது.எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. படுகாயம் அடைந்த 100க்கும் அதிகமானோரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், இந்தோனேசியா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 34 ஆக உயர்வடைந்து உள்ளது. 169 பேர் காயமடைந்து உள்ளனர். 17 பேரை இன்னும் காணவில்லை. இதுவரை 3,700 பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன.இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ சென்று பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மக்களுக்கு உறுதி வழங்கினார்.

Views: - 540

0

0