‘இது ஓடாதுங்க…பறக்கும்’: பார்வையாளர்களை பிரமிக்க வைத்த பறக்கும் பைக்…ஆனா விலைய கேட்டா தல சுத்திறும்..!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 12:13 pm
Quick Share

டோக்கியோ: ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பறக்கும் ‘ஹோவர் பைக்’ பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் வகையிலான ஹோவர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ALI Technologies நிறுவனம் X Turismo Limited Edision என்ற புதிய வகை பறக்கும் ஹோவர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இதன் விலை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 10 லட்சம் ரூபாயாம்.

courtesy

இந்த ஹோவர் பைக்கை பயன்படுத்தி வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்க முடியும். இதன் சோதனை ஓட்டம் ஃபுஜி மலை அருகே நடத்தப்பட்டது. ஹோவர் பைக் வானில் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க இந்த ஹோவர் பைக் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அவசர கால ஆம்புலன்ஸ் சேவைக்கும் இதனை பயன்படுத்தும் யோசனை இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 919

1

0