ஈரான் மீதான ஆயுத ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான நீண்ட கால ஐநா தடை ரத்து..!

18 October 2020, 2:13 pm
iran_updatenews360
Quick Share

2015’ஆம் ஆண்டின் முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தின் படி ஈரானுக்கு எதிரான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஆயுதத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

“இன்றைய நிலவரப்படி, ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு ஆயுதங்கள், தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் நிதி சேவைகளை மாற்றுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதேசங்களுக்குள் நுழைவது அல்லது செல்வது தொடர்பான அனைத்து தடைகளும் ரத்து செய்யப்படுகிறது” என்று ஈரானிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து மற்றும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஐ.நா. தடை, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231’ன் கீழ் நிறுத்தப்பட்டுள்ளது.

“இன்றைய நிலவரப்படி, இஸ்லாமிய குடியரசு எந்தவொரு ஆதாரங்களிலிருந்தும் எந்தவொரு சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இன்றி தேவையான எந்தவொரு ஆயுதங்களையும் உபகரணங்களையும் வாங்கக்கூடும். மேலும் இது அதன் தற்காப்பு தேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மேலும் அதன் சொந்த கொள்கைகளின் அடிப்படையில் தற்காப்பு ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்யலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஆயுதக் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் பயணத் தடை ஆகியவை வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லாமல் தானாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

ஆகஸ்ட் 14’ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஈரானிய ஆயுதத் தடையை நீட்டிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா மற்றும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடக்கியது.

இதையடுத்து ஈரான் மீது நீண்ட காலம் விதிக்கப்பட்டிருந்த ஆயுதத் தடை முடிவுக்கு வந்துள்ளது.

Views: - 28

0

0