4கி.மீ தான் தொலைவு – ஆனால் 20 மணிநேரம் வித்தியாசம் : விநோத நிகழ்வு

1 March 2021, 1:12 pm
Quick Share

இரண்டு தீவுகளுக்கு இடையேயான தொலைவு 4 கிலோ மீட்டர்கள் தான் என்றாலும், இவ்விரு தீவுகளுக்கு இடையே 20  மணிநேரம் வித்தியாசம் நிலவுவது மிகுந்த வியப்பை அளிப்பதாக உள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள டிக்டாக் வீடியோ, மக்களிடையே, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


அமெரிக்கா, 1867ம் ஆண்டில் ரஷ்ய நாட்டிடம் இருந்து, அலாஸ்கா பகுதியை வாங்கியது. அலாஸ்கா பகுதியில், உள்ள இரண்டு சிறிய தீவுகளே, அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் எல்லைப்பகுதியாக விளங்கி வருகிறது.


1728-ஆம் ஆண்டில், ரஷ்ய அறிஞர் விட்டஸ் பெரிங், இந்த தீவுகளில் வந்து இறங்கியதன் நினைவாக, இந்த தீவுகளுக்கு கிரேக்க துறவி டியோமெட் பெயர் வைக்கப்பட்டது. பரப்பளவின் அடிப்படையில், பெரிய டியோமெட் (Big Diomede) மற்றும் லிட்டில் டியோமெட் (Little Diomede) என்று பெயரிடப்பட்டன.


இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையேயான தொலைவு, வெறும் 4 கிலோ மீட்டர்கள் என்ற போதிலும், ஒரு தீவின் நேரம், மற்ற தீவின் நேரத்தை ஒப்பிடும்போது, 20 மணிநேரம் வித்தியாசம் கொண்டதாக உள்ளது. இந்த காரணத்தினாலேயே, பெரிய டியோமெட் தீவிற்கு Tomorrow Island என்ற பெயரும், லிட்டில் டியோமெட் தீவுக்கு Yesterday Isle என்ற பெயரும் உண்டு.


இதுதொடர்பான வீடியோ, டிக்டாக் செயலியில், “There are some weird places in the world.” என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர், இதை நம்பமுடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 23

0

0