மீண்டும் தொங்கு பாராளுமன்றம்..! நொந்து போன இஸ்ரேல் பிரதமர்..!

Author: Sekar
24 March 2021, 1:15 pm
israel_pm_updatenews360
Quick Share

இரண்டு ஆண்டுகளுக்குள் நான்காவது தேர்தலை சந்திக்கும் இஸ்ரேலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் ஆளும் லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறினாலும், அரசாங்கத்தை அமைப்பதற்கும் அரசியல் முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது எனத் தெரிகிறது.

நேற்று மாலை வெளியிடப்பட்ட மூன்று முக்கிய தொலைக்காட்சி சேனல்களின் அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்கள் 120 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றமான நெசெட்டில் சுமார் 31-33 இடங்களை லிக்குட் கட்சி கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் சுமார் 16-18 இடங்களை மட்டுமே பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த காலங்களில் நம்பமுடியாதவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை எனும் நிலையில், நெத்தன்யாகு தன்னுடன் சேர மற்ற கட்சிகளை சமாதானப்படுத்த வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் இது போன்ற கூட்டணிகள் தொடர்ந்து முறிவை சந்தித்துள்ளதால், தற்போதும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக விரைவில் ஐந்தாவது தேர்தலையும் இஸ்ரேல் சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு பதிலளித்த நெத்தன்யாகு வெற்றி குறித்து பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.

ஆனால் வாக்காளர்கள் ஒரு குறிப்பிடத்தக்க கருத்தியல் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார். “இஸ்ரேலிய குடிமக்களில் தெளிவான பெரும்பான்மை வலதுசாரிகளுக்கு உள்ளது என்பது தெளிவாகிறது.” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

ஒரு லிக்குட் கட்சியின் பேரணியில் உரையாற்றிய நெத்தன்யாகு, பாராளுமன்றத்தில் நிலையான வலதுசாரி அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

“எங்கள் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நான் அணுகுவேன். நான் யாரையும் விலக்க மாட்டேன்.” என்று அவர் ஆதரவாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையே தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முழு முடிவுகள் வெளிவர சில தினங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 77

0

0