கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராட்டம்..! வீதிகளுக்கு வந்த லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள்..!

By: Sekar
4 October 2020, 4:04 pm
israel_lockdown_restrictions_updatenews360
Quick Share

மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தடைசெய்யும் புதிய கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய உத்தரவுகளின்படி, நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை சமூக இடைவெளியுடன் அதிகபட்சம் 20 பேர் கொண்ட குழுவாக நடத்திக்கொள்ளலாம் என டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நேற்று, இஸ்ரேல் முழுவதும் சமூக இடைவெளியுடன் பேரணிகள் நடத்தப்பட்டன. அவற்றில் சில போலீஸ் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து வன்முறையாக மாறியது.

பொது ஒழுங்கை மீறியதற்காக மற்றும் போலீஸ் அதிகாரிகளை தாக்கியதற்காகடெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 38 பேர் கைது செய்யப்பட்டனர் என காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை, கைது செய்யப்பட்டவர்களில் 37 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் அதிகாரியை தாக்கியதாக சந்தேகிக்கப்படுவதால் அவரை மட்டும் தொடர்ந்து காவலில் வைத்துள்ளனர்.

மேலும் ஜெருசலேமில், நான்கு பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், நேற்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த குழுக்களில் ஒன்றான “கருப்புக் கொடிகள்” இயக்கம் நாடு முழுவதும் 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றதாகக் கூறியுள்ளது.

Views: - 58

0

0