ரியல் ஹீரோவாகும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்: நாட்டின் முக்கிய பொறுப்பை கொடுத்து கௌரவித்த இங்கிலாந்து அரசு!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 12:58 pm
Quick Share

லண்டன்: பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக்கை இங்கிலாந்தின் கப்பல் படைத்தளபதியாக நியமித்து அரசு கௌரப்படுத்தியுள்ளது.

Image

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25வது படமாக ‘நோ டைம் டூ டை’ பெயரில் பிரம்மாண்ட் படம் தயாராகியுள்ளது. இதில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பில் டேனியல் கிரேக் படக்குழுவினர் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடி உருக்கமாக பேசி விடைபெற்றார். ஏனெனில், இந்த படம் டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் டேனியல் கிராக்கை கவுரவிக்கும் விதமாக இங்கிலாந்து கப்பல் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், டேனியல் கிரேக் கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரமிக்க பதவி தனக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக டேனியல் கிரேக் பதிவிட்டுள்ளார்.

Views: - 310

0

0