ஜப்பானில் உருவாகிறதா கொரோனா 2வது அலை…? உணவகங்கள், பார்கள் மூடல்

1 August 2020, 9:26 pm
coronavirus_updatenews360
Quick Share

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா 2வது அலை தாக்க தொடங்கி இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் உணவகங்கள், பார்கள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளை உறைய வைத்த கொரோனா தாக்கம் ஜப்பானில் குறைந்து வருவதாக அந்நாடு அறிவித்திருந்தது. ஆனால் இப்போது ஜப்பானில் இரவு விடுதிகள் திறக்கப்பட்டதால் கொரோனா அதிகமாக பரவுவது  கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் செயல்படும் உணவகங்கள், பார்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கொரோனா 2வது அலை காரணமாக பலர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவசர நிலை நீக்கப்பட்டவுடன் அந்நாட்டின் தென் பகுதியில் மீண்டும் கொரோனா பரவியது. புகுயோகா தீவின் கிடாக்கியுஷு நகரத்தில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொற்றை கட்டுப்படுத்த, ஜப்பான் அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

கொரோனா பொதுவாக நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த கொரோனாவை கண்டு ஜப்பான் அலற ஒரு காரணம் இருக்கிறது.

அந்நாட்டில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வயதானவர்கள் இருக்கின்றனர். அந்நாட்டில் சராசரி இறப்பு வயது 80 என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0