ஜப்பான் பிரதமராக ‘யோஷிடிஹைட் சுகா‘ தேர்வு : வரும் புதன்கிழமை பதவியேற்பு!!

15 September 2020, 8:05 am
SUGA - Updatenews360
Quick Share

உடல்நலக்குறைவால் ஷின்சோ அபே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஜப்பான் நாட்டு பிரதமராக யோஷிடிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனக்கு உடல்நிலை பாதிப்புள்ளதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து புதிய பிரதமராக தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆளும் கட்சியான லிபரல் டெமாகிரடிக் கட்சியினர் கூடி வாக்கெடுப்பு நடத்தியதில் 71 வயதான யோஷிஹைட் சுகா ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 534 உறுப்பினர்களில் 377 பேர் சுகாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட யோஷிஹைட் சுகா வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் முன்னதாக முறைப்படி ஷின்சோ அபே பதவி விலகுவா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷின்சோ அபேவின் கொள்ளைகளை பின்பற்றுவேன் என கூறியுள்ள சுகா, விவசாய குடும்பத்தில் பிறந்து, பள்ளிப்படிப்பை முடித்து அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து, அதில் கிடைத்த வருமானத்தை வைத்து கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பிரதமராக உயர்ந்துள்ள இவ அபேவின் உதவியாளராக இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

Views: - 5

0

0