“பேசாம தோல்வியை ஒத்துக்கோங்க மாமா”..! டிரம்பின் மருமகன் ஆலோசனை..?

8 November 2020, 6:47 pm
Jared_Kushner_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து ஜனாதிபதியை அணுகியுள்ளார் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

டிரம்ப் ஒரு அறிக்கையில், பிடென் தன்னை வெற்றியாளராக பொய்யாக காட்டிக்கொள்கிறார் என்றும், தேர்தல் முடிவு வெகு தொலைவில் உள்ளது என்றும் கூறியதை அடுத்து இந்த விவகாரம் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் சார்பு ஆட்கள் மூலம் பொய்யாக பிடெனை வெற்றியாளராக காட்ட உதவுவதாகவும், முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவதாக உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறினார்.

முன்னதாக பிடென் நேற்று பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போர்க்கள மாநிலமான பென்சில்வேனியாவில் வெற்றி பெற்ற பின்னர், அவர் பெரும்பான்மைக்குத் தேவையான 270 இடங்களைக் கடந்தார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிடென் டிரம்பை தோற்கடித்ததன் மூலம் அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக வரும் ஜனவரியில் பதவியேற்பார்.

Views: - 21

0

0