வெள்ளை மாளிகையில் நம்ம ஊர் கோலங்கள்: களைகட்டும் பைடன் – ஹாரிஸ் பதவியேற்பு விழா..!!(போட்டோஸ்)

19 January 2021, 1:46 pm
4 - updatenews360
Quick Share

வாஷிங்டன்: ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கி உள்ள பிரமாண்ட கோலங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனிடையே ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் நடைபெற உள்ளது.

மேலும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், டைல்ஸ் களை பயன்படுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சியில் இந்த கோலங்கள் காட்சிப்படுத்தப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா முழுதும் இருந்து 1,800க்கும் அதிகமானோர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

அமெரிக்காவில், துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற இருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Views: - 0

0

0