அரிசோனா – ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார் ஜோ பைடன்: வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு…!!

14 November 2020, 12:26 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றியதால் அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நேற்று அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அமெரிக்க தேர்தலின் இறுதி தேர்தல் எண்ணிக்கையை பொருத்தவரை ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்கு எண்ணிக்கை 306 ஆகவும்,வட கரோலினாவை வென்ற குடியரசுக் கட்சி டொனால்டடு டிரம்பிற்கு 232 வாக்கு எண்ணிக்கையாகவும் உயர்ந்து உள்ளது.

இந்த முடிவுகளை நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் பிற நெட்வொர்க்குகள் அறிவித்துள்ளன. இரண்டு இறுதி மாநிலங்களும் தேர்தல் தினத்திற்கு ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.

trumph and joe - updatenews360

ஜார்ஜியாவில் பைடனின் வெற்றி அவரது வாக்கு எண்ணிக்கையில் 16 யை கூடுதலாக சேர்த்தது, 2016 தேர்தல்களில் டொனால்ட் டிரம்ப் 306 தேர்தல் வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232 வென்று இருந்தார்.

2016ல் டிரம்ப் வென்ற ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த ஆண்டு பைடனை நோக்கி திரும்பி உள்ளன. நீண்ட இடைவெளிக்குபிறகு ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார்.

Views: - 28

0

0