அமெரிக்காவின் 46’வது அதிபராக பதவியேற்றார் ஜோ பிடென்..!
20 January 2021, 10:59 pmஅமெரிக்காவின் 46’வது அதிபராக ஜோ பிடென் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் எனும் சிறப்பை ஜோ பிடென் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, ஜோ பிடென் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். ஆனால் பிடென் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாகக் கூறி டிரம்ப் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், பல களேபரங்களுக்கு மத்தியில், அமெரிக்க வழக்கப்படி, உள்ளூர் நேரப்படி ஜனவரி 20’ஆம் தேதியான இன்று நண்பகல் 12 மணிக்கு ஜோ பிடென் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது ஆணையாக ஜோ பிடென் பதவியேற்றார்.
ஜோ பிடென் பதவியேற்பில் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளாத நிலையில், குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷும், முன்னாள் துணை அதிபர் மைக் பென்சும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும், ஜோ பிடென் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜோ பிடென் பதவியேற்றவுடன்,அமெரிக்காவில் அடுத்து செய்ய உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த தனது உரையை ஆற்றி வருகிறார்.
கடந்த ஜனவரி 6’ஆம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் கடும் வன்முறை வெடித்த நிலையில், தற்போது ஜோ பிடென் பதவியேற்புக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுளளது.
0
0