பத்திரிக்கையாளர்களை அரைநிர்வாணப்படுத்தி தாக்குதல் : தலிபான்கள் அட்டூழியம்… அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!!

By: Babu
9 September 2021, 12:51 pm
afghan - kabul - taliban - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி தலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்டனர். அங்கு இடைக்கால ஆட்சியையும் அவர்கள் கொண்டு வந்து விட்டதாக அறிவித்து விட்டனர். தலிபான்களின் ஆட்சியை விரும்பாத வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட தலிபான்கள், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்கள் இருவரை அரை நிர்வாணமாக்கி, தாக்குதல் நடத்தியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலிபான்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்கள் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற தங்களது நிறுவன பத்திரிக்கையாளர் மற்றும் வீடியோ எடிட்டரை தலிபான்கள் கடத்திச் சென்று தாக்குல் நடத்தியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 343

0

0

Leave a Reply