காபூல் விமான நிலையமும் கட்டுப்பாட்டுக்குள் வந்தாச்சு… துப்பாக்கி ஏந்தியபடி தலிபான்கள் ரோந்து…!!

Author: Babu Lakshmanan
1 September 2021, 9:15 am
talibans - updatenews360
Quick Share

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் குடிபுகுந்த அமெரிக்க படைகள், சுமார் 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை வேட்டையாடி வந்தது. இதையடுத்து, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும், அமெரிக்க படைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியேறிவிடும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஒருநாளைக்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறிவிட்டனர். இதனை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்கபடைகளின் தலைவரும், அமெரிக்க தூதரும் கடைசி நபர்களாக விமானத்தில் ஏறியதாகவும், அமெரிக்க ராணுவங்கள் வெளியேறியதை தொடர்ந்து, காபூல் நகரத்தில் தலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடினர்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விமான நிலையத்தை சுற்றிலும் இயந்திர பீரங்கிகள், துப்பாக்கிகளை ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 448

0

0