கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்: நித்தியானந்தா பெருமிதம்

16 July 2021, 8:09 pm
nithyanandha - updatenews360
Quick Share

கைலாசா நாட்டுக்கு தனி யூனியன் பிரதேசம் என ஐ.நா.சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நித்தியானந்தா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்க கண்டத்தில் ஒரு தீவினை விலைக்கு வாங்கி கைலாசா என்று அதற்கு பெயர் வைத்திருப்பதாக தகவல் வந்தது. அந்த கைலாசா நாட்டுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வாங்கவும் நித்தியானந்தா முயற்சித்து வருவதாகவும் தகவல் வந்தன. தற்போது அந்த கைலாசாதீவுக்கு யூனியன் பிரதேசம் என ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவரது பக்தர்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டினை அங்கீகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.இது உண்மைதான் என்று சொல்லும்படியாக வெளிவந்திருக்கிறது நித்தியானந்தாவின் வீடியோ. அந்த வீடியோவில் அவர், ‘’விவேகானந்தர் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார். அரவிந்தர் வாழ்வெல்லாம் முயற்சித்தார், சதாசிவன் செய்து முடித்தார். சதாசிவன் அருளால் இப்போது நித்தியானந்தன் நிறைவேற்றி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Views: - 147

0

0