மொபைல் போனை படுக்கையறையில் வைத்தால் இப்படியொரு சிக்கலா..? ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கியத் தகவல்..!

4 February 2021, 1:30 pm
Smartphones_Sex_Life_UpdateNews360
Quick Share

இன்றைய நவீன யுகத்தில் நமது அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மொபைல் போன் மாறிவிட்டது. இதனால் நமக்கு பல நன்மைகள் இருந்தாலும், சில அந்தரங்க செயல்பாடுகளின் போது மொபைல் போனை விலக்கி வைத்திருப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவிக்கன்றனர். 

பிரிட்டிஷாரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறிப்பாக உடலுறவு கொள்ளும்போது மொபைல் போன் அருகில் இருந்தால் என்னவெல்லாம் விளைவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் சுகாதார மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறியதாவது :-  “நம்மிடம் தொலைபேசி இருக்கும்போது, அது அடிப்படையில் வெளி உலகிற்கான ஒரு கதவு போன்றது. இது உங்களுடன் இருந்தால் ரகசியமாக உடலுறவில் ஈடுபட்டாலும் முன் வாசலில் உடலுறவு கொள்வது போன்று  தான் எடுத்துக்கொள்ள முடியும்.

நாம் நிதானமாக முழு கவனத்துடனும் இருந்தால் தான் உணர்ச்சிகளிலும் துணையுடன் நெருக்கமாக ஈடுபட முடியும். ஆனால் இந்த சிறிய தொழில்நுட்ப கருவியான மொபைல் போன், உடலுறவின் தன்மையைக் கெடுத்து கவனத்தை வேறு பக்கம் திருப்புகிறது.

எனவே ஒரு மொபைல் போனின் இருப்பு கூட உங்களின் பரிவுணர்வையும் அக்கறையையும் குறைக்கும். அவற்றை வேறு அறையில் வைக்கவும்.” எனக் கூறினர்.

மேலும் டாக்டர் ஃபரிமண்ட், ஒரு வீடியோவில் காலை உணவுக்கு முன் உடலுறவு கொள்ள சிறந்த நேரம் என்று கூறினார்.

அவர் மேலும், “ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஒப்பிடும்போது வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு என்பது 40,000 டாலர் ஊதிய உயர்வைப் பெறும்போது ஏற்படும் திருப்திக்கு ஒத்த ஊக்கத்தை அளிக்கிறது.” என்று கூறினார்.

Views: - 3

0

0