“வெரி சாரி”..! தென்கொரியரை போட்டுத்தள்ளியதற்கு மன்னிப்புக் கோரிய கிம் ஜோங் உன்..!

25 September 2020, 7:21 pm
Kim_Jong_un_UpdateNews360
Quick Share

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஒரு தென் கொரியரை கடலில் கொன்றது எதிர்பாராத மற்றும் அவமானகரமான சம்பவம் என விவரித்ததோடு மன்னிப்பும் கோரியுள்ளார் என்று சியோலில் உள்ள தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

எல்லைப்புறம் வழியாக சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து தன் நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் நபர்களை, கொரோனா பீதியால் கண்டதும் சுட்டுக் கொல்ல வடகொரிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ரோந்து கப்பலில் இருந்து தெரியாமல் தவறி கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த தென்கொரிய அதிகாரியை, வடகொரிய கடற்படையினர் சுட்டுக் கொன்றதோடு எண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக வடகொரிய படைகள் ஒரு தென்கொரிய குடிமகனைக் கொன்றது தென்கொரியாவில் கோபத்தைத் தூண்டியுள்ளது.

இதையடுத்து விஷயத்தின் தீவிரத்தை வடகொரியா உணர்ந்து உடனடியாக வந்துள்ளது.

வடகொரியாவிடமிருந்து மன்னிப்பு அதுவும் தனிப்பட்ட முறையில் கிம்மிடமிருந்து வருவது மிகவும் அசாதாரணமானது. மேலும் இந்த செய்தி இரு கொரிய நாடுகளுக்கிடையேயான ஆழமான முடக்கம் மற்றும் வடகொரியாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வடகொரியா மன்னிப்பு கோருவது தனது அண்டை நாட்டை சமாதானப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிதான் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

Views: - 9

0

0