போட்டோவுக்கு போஸ் கொடுத்த இந்தியன் டீம்! கே.எல்.ராகுல் என்ன பண்ணார் தெரியுமா?

Author: Poorni
26 March 2021, 10:15 am
Quick Share

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினர் அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மட்டும், ஹர்திக் பாண்டியாவின் மகனை தூக்கி வைத்துக் கொண்டு பின்னாடி நிற்கிறார். இந்தியன் விக்கெட் கீப்பர்கள் உண்மையில் ‘பேபி சிட்டர்கள்’ தான் என கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பேபி சிட்டர் என அழைத்தார். அதாவது போட்டியின் போது ஸ்லெட்ஜிங் செய்த பெய்ன், தனது குழந்தையை பார்த்துக் கொள் என்று பொருள்படும் வகையில், ரிஷப் பண்ட்டை பேபி சிட்டர் என்று கிண்டல் செய்தார். அப்போது இது பெரும் பேசு பொருள் ஆனது. பின் பெய்னின் குழந்தையை நேரில் சந்தித்த பண்ட், அதனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை, பெய்ன் மனைவி பகிர அது வைரலானது.

இந்நிலையில், இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணியை, முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது. இந்திய அணியினர் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பார்ட்டி ஒன்றில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அந்த போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்த கே.எல்.ராகுல் மட்டும், ஹர்திக் பாண்ட்யாவின் குழந்தையை தூக்கி வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர்கள் ஷேர் செய்ய, அது வைரலானது. கிரிக்கெட் பிரபலங்கள் முதல், சாமானிய கிரிக்கெட் ரசிகன் வரை, இந்திய விக்கெட் கீப்பர்கள் உண்மையில் பேபி சிட்டர்கள் தான் போல.. என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 92

0

0