அடேங்கப்பா…30 கோடி ரசிகர்களை எட்டிய முதல் பெண்…இன்ஸ்டாவில் சாதனை படைத்த கைலி ஜென்னர்..!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 4:34 pm
Quick Share

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க டிவி நடிகையும் தொழிலதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராமில் 30 கோடி ரசிகர்களை கடந்த முதல் பெண் எனும் சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான கைலி ஜெனர் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 300 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த மைல்கல்லின் மூலம் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Kylie-Jenner-Creates-record-by-reaching-the-First-woman-to-mark-300-million-followers-on-Instagram--

பாப் இசை உலகின் நட்சத்திர பாடகி Ariana Grandeஐ பின்னுக்கு தள்ளியுள்ளார் 24 வயதான ஜெனர். இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபராக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் ரொனால்டோ உள்ளார். அவரை 388 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ள கைலி ஜெனர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகியிருந்தார். ஜனவரி பிறந்து 13 நாட்கள் கடந்துள்ள சூழலில் இரண்டு பதிவுகளை மட்டும்தான் இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2018ல் தன் முதல் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார் கைலி ஜெனர். அந்த புகைப்படம் 18 மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டது. அதோடு இன்ஸ்டாவில் அதிக லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் அது படைத்தது.

Views: - 419

0

0