கிர்கிஸ்தானில் வெடித்தது மக்கள் போராட்டம்..! தேர்தல் முடிவை செல்லாது என அறிவித்தது தேர்தல் ஆணையம்..!

Author: Sekar
6 October 2020, 9:23 pm
Kyrgyzstan_protests_UpdateNews360
Quick Share

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் மற்றும் பிற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து, கிர்கிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணையம் கடந்த வார இறுதியில் வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை செல்லாது என்று அறிவித்தது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒரே இரவில் அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றி புதிய தேர்தலைக் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஒருவர் இறந்தார். பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை வெளியேற்றி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

இதையடுத்து நாட்டில் பதற்றத்தைத் தடுப்பதற்காக வாக்களிப்பின் முடிவுகளை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் நூர்ஷான் ஷைல்டாபெகோவா இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலின் ஆரம்ப முடிவுகளை அதிகாரிகள் அறிவித்ததையடுத்து தலைநகர் பிஷ்கெக் மற்றும் பிற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. வாக்கு வாங்குதல் மற்றும் பிற மீறல்கள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில், ஆளும் உயரடுக்கினருடன் உறவு கொண்ட இரு கட்சிகளுக்கு பெரும்பான்மையான வாக்குகல போடப்பட்டதாக அவர்கள் காரணம் கூறினர்.

முன்னதாக வாக்கு ரத்து மற்றும் புதிய தேர்தலைக் கோரி ஒரு டஜன் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று வீதிகளில் இறங்கினர். தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகை மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளால் கூட்டத்தை கலைக்க போலீசார் களமிறங்கினர். கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி சுமார் 590 பேர் போலீசுடனான மோதல்களில் காயம் அடைந்தனர் மற்றும் ஒருவர் இறந்தார் என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அட்டம்பாயேவை விடுவிக்கக் கோரி மற்றொரு எதிர்ப்பாளர்கள் கிர்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவுக்குச் சென்றனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் அதம்பாயேவை விடுவித்தனர்.

இதற்கிடையே பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஜீன்பெகோவை வெளியேற்றி புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தனர்.

Views: - 39

0

0