ஜப்பானில் பெய்த கனமழையால் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த வீடுகள்…19 பேர் மாயம்..!!

3 July 2021, 3:20 pm
Quick Share

டோக்கியோ: ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் ஷிஜூவோகா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 10:30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.

குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை அப்பகுதி அதிகாரிகள் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 203

0

0