பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் காலமானார்: ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர்…உலக திரையுலகினர் இரங்கல்..!!

Author: Aarthi Sivakumar
8 January 2022, 3:03 pm
Quick Share

அமெரிக்கா: பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும், முதல் முறை ஆஸ்கர் விருதை வென்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவருமான சிட்னி பாய்ட்டியர் காலமானார்.

கறுப்பினத்தை சேர்ந்த சிட்னி பைய்டியர் தனது நடிப்பு திறமையால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மேலும், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் இந்த படம் சிட்னி பைய்டியருக்கு பெற்றுத் தந்தது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் சிட்னி பைய்டியர் நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 554

0

0