குக்கீஸ்களை விற்க கேமராவிடம் கெஞ்சிய சிறுமி: லைக்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்கள்

18 January 2021, 8:18 am
Quick Share

உங்களுக்கு ஒன்று? அல்லது இரண்டு? அல்லது மூன்று அல்லது நான்கு அல்லகு ஐந்து? வேண்டுமா என குக்கீஸ்களை விற்க, கேமராவுடன் பணிந்து பேசும் சிறுமியின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி உள்ளது.

அமெரிக்காவின் ஸ்காட்ஸ்டேலில் உள்ள செய்யென் பாரம்பரிய பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி அல்லி ஷ்ரோயர். இவர் பள்ளியின் சாரணர் இயக்கத்தில், இருந்துள்ளார். அங்கு அல்லிக்கு டாஸ்காக குக்கீஸ் விற்பனை செய்யும் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு குக்கீஸ்களை விற்க முடிவு செய்த அவர், புதுமையான வழியை தேடினார். ஆனால் தான் செய்வது வைரலாகும் என இந்த முதலாம் வகுப்பு மாணவிக்கு தெரியாது.

அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா? ஒரு வீட்டின் டோர்பெல் கேமராவில் தனது குக்கீஸ் விற்பனையை பதிவு செய்தார். அதில், “நீங்கள் ஒன்றை விரும்புகிறீர்களா? அல்லது இரண்டு? அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து?” எத்தனை குக்கீஸ்கள் வேண்டும் என பணிவுடன் கேமராவை பார்த்து கேட்கிறார். சிறுமியின் இந்த மழலை பேச்சில் மயங்கிய அந்த வீட்டின் உரிமையாளர், அந்த வீடியோவை அல்லியின் தாய்க்கு அனுப்பினார்.

இதனை அவர் தனது பேஸ்புக்கில் பகிர, அந்த வீடியோ வைரலாக பரவி உள்ளது. இதனையடுத்து முதல் 24 மணி நேரத்திலேயே 200க்கும் மேற்பட்ட குக்கீஸ் பாக்ஸ்களை விற்பனையாகி உள்ளது. அனைத்து குக்கீஸ்களையும் அடுத்த வாரம் முதல் வழங்க துவங்கப்போவதாக, அல்லியின் தாய் கிறிஸ்டன் ஷ்ரோயர் தெரிவித்தார். ஆனாலும், கொரோனா பரவல் காரணமாக தங்களால் அதிகளவிலான குக்கீஸ்களை விற்பனை செய்ய முடியாது என அல்லி வருத்தத்தில் உள்ளாராம்.

Views: - 0

0

0