“மிங்கிள்”ஆக ஏங்கும் “சிங்கிள்” காண்டாமிருகம்… ஒருவேளை 90ஸ் கிட்ஸாக இருக்குமோ?

16 January 2021, 9:25 am
Quick Share

வங்கதேச நாட்டில் உள்ள தேசிய மிருக காட்சி சாலையில் காஞ்சி என்ற பெண் காண்டா மிருகம் உள்ளது. இந்த காண்டாமிருகம் அந்த மிருககாட்சிசாலையிலேயே புகழ் பெற்ற காண்டா மிருகம் ஆகும். அங்கிருக்கும் ஒரே காண்டாமிருகமும் இது தான். இந்த காண்டா மிருகத்திற்கு தற்போது கருத்தரிக்கும் வயதாகிவிட்டது. அதனால் இந்த காண்டாமிருகம் தற்போது துணையைத் தேடி வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த காண்டாமிருகத்திற்கு ஜோடி இருந்தது. ஆனால் அந்த ஆண் காண்டாமிருகம் கடந்த 2014ம் ஆண்டு இறந்துவிட்ட சூழ்நிலையில் தற்போது அது “சிங்கிள்” ஆகத் தான் வாழ்ந்து வருகிறது. இது தற்போது தனக்கான துணைக்காக ஏங்கிவருவதாக அதன் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இதன் பராமரிப்பாளர் ஃபாரித் மியா கூறும் போது : “காஞ்சியைப் பார்க்க அதிகமான கூட்டம் வருகிறது. ஆண்டிற்கு 20 லட்சம் மக்கள் காஞ்சியைப் பார்த்துச் செல்கின்றனர். தற்போது காஞ்சி கருவுறுவதற்குத் தயாராகிவிட்டது. தற்போது தன் துணைக்காக ஏங்கத் துவங்கிவிட்டது. இதனால் சாப்பாட்டைச் சாப்பிட மறுக்கிறது. நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அடிக்கடி அதுக்கு மூடு அவுட் ஆகிறது. இதற்கு முக்கியமான காரணம் காஞ்சி சிங்கிளாக இருப்பது தான். தற்போது கொரோனா காலம் என்பதால் காஞ்சிக்கு எங்களால் ஒரு துணையை இங்கே கொண்டு வர முடியவில்லை. நான் தினந்தோறும் அதற்குச் சீக்கிரம் ஒரு துணைகொண்டு வருகிறோம் என ஆறுதல் சொல்லுகிறேன். தற்போது அதன் உடல் நிலை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் உடல் நிலை மோசமாக மாறக்கூடும்., தற்போது சிங்கிளாக இருக்கும் காஞ்சியை விரைவில் மிங்கிளாக ஒரு ஜோடியை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவோம் ” எனக்கூறினார்.

சிங்கிளாக இருக்கும் காண்டாமிருகம் மிங்கிளாக சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்துப் பல நெட்டிசன்கள் இந்த காண்டாமிருகம் 90ஸ் கிட்ஸாக இருக்கும் எனச் சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது விலங்கு நல ஆர்வளர்கள் பலர் காஞ்சிக்கு ஜோடியை தேடிக்கொண்டு வருவதற்கான உதவிகளை வங்கதேச அரசிற்குச் செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0