ஜப்பான் கடல் எல்லைக்குள் நீண்ட தூரம் சென்ற சீன ரோந்து கப்பல்..! வெளியேற மறுத்து அடாவடி..!

By: Sekar
13 October 2020, 7:17 pm
Japan_Senkaku_islands_map_UpdateNews360
Quick Share

கிழக்கு சீனக் கடலில் உள்ள செங்காகு தீவுகளுக்கு வெளியே ஜப்பானின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு சீன ரோந்து கப்பல்கள் நுழைந்ததாகக் கூறப்பட்ட பின்னர், ஜப்பான் கடலோர காவல்படை இன்று, இரண்டு கப்பல்களும் இன்னும் ஜப்பான் கடல்பகுதிலேயே உலாவிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஜப்பான் எல்லைக்குள் சீனா மேற்கொண்ட அதிகபட்ச ஊடுருவலாகும்.

ரோந்து கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும், இன்று காலை 9 மணி நிலவரப்படி, தைஷோ தீவுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் கடலில் இருந்ததாகவும் ஜப்பான் கடலோர காவல்படை கூறியுள்ளது.

இந்த ஊடுருவல் ஜப்பானின் அரசாங்கம் 2012’ஆம் ஆண்டில் ஒரு தனியார் ஜப்பானிய உரிமையாளரிடமிருந்து சில செங்காகு தீவுகளை வாங்கியதிலிருந்து மிக நீண்டது.

இந்நிலையில் ஜப்பான் கடலோர காவல்படை ரோந்து படகுகளை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளதுடன், ஜப்பானின் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து வெளியேறுமாறு கப்பல்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

ஆகஸ்ட் 28’க்குப் பிறகு சீன அரசாங்கக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு 18 வது முறையாக ஜப்பான் கடல் எல்லைக்குள் அத்து மீறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் இரண்டிலும் சீனா தனது கப்பற்படையின் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. சீன-அமெரிக்க பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இப்பகுதியில் அதிகரித்து வரும் அமெரிக்க இராணுவ இருப்புக்கு பதிலடியாக சீனாவின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகிறது.

Views: - 44

0

0