ரூ.2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி..!

24 August 2020, 6:40 pm
Quick Share

தேசபிதா மகாத்மா காந்தி 1920 மற்றும் 1930-ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய விற்பனையாளரின் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.

அவருடன் ஏற்பட்ட நட்பில் தங்க முலாம் பூசிய தனது மூக்கு கண்ணாடியை நியாபக பரிசாக கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு, அவரது வம்சாவளியை சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்டோவ் என்பவருக்கு அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து அந்த மூக்கு கண்ணாடியும், அதனுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது.

இந்த மூக்கு கண்ணாடி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர் அதை வாங்க முன்வந்துள்ளனர். பிரிட்டன் விலையில் வெரும் 15 ஆயிரம் பவுன்ட்ஸ்கள் மதிப்புடைய அந்த மூக்கு கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 லட்சம் ஆகும். மகாத்மா காந்திக்கு, தன்னிடம் இருக்கும் பழைய அல்லது தேவையற்ற பொருட்களை பிறரிடம் கொடுப்பது, அதுபோல அவருக்கு உதவியவர்களுக்கும், தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு பொருளை வழகுவது பழக்கமாக இருந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Views: - 2

0

0