“மைசூர் போண்டா ஏன் மைசூரில் பண்ணவில்லை” என்பது போல அமெரிக்காவில் நடந்த செம காமெடி

Author: Poorni
3 January 2021, 12:43 pm
Quick Share

நம்மூரில் பக்கத்து டீ கடையில் மைசூர் போண்டா வாங்கிவிட்டு இது ஏன் மைசூரில் செய்யவில்லை என புகார் சொன்னால் எப்படி இருக்கும். அப்படியாக அமெரிக்காவில் ஒருவர் ஹவாய் ரோல் வாங்கிவிட்டு அது ஏன் ஹவாயில் செய்யவில்லை என புகார் அளித்த சம்பவம் சமீபத்தில் நடந்தது.

அமெரிக்காவின் நியூயார்க்கை நகரை சேர்ந்தவர் ராபர்ட் கேலின்ஸ்கை, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைலோ என்ற பகுதியில் உள்ள கிங்ஸ் பேக்கரி என்ற பேக்கரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் “ஹைலோ, ஹவாய்” என்ற பெயரில் ஹாவாய் ரோல் என்ற பிரபலமான உணவை விற்பனை செய்துள்ளனர். அவர்கள் அந்த உணவை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

ஆனால் அவர் வாங்கிய ஹாவாய் ரோல் அமெரிக்காவிலேயே உள்ள டோரேன்ஸ் என்ற பகுதியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ராபர்ட் இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் ஹவாய் ரோல் என கூறி அமெரிக்காவில் தயாரித்த உணவைவே வழங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

நம்மூரில் மைசூர் போட்டோ போல தான் அந்த நாட்டில் ஹவாய் ரோல், அதன் சுவை மற்றும் செய்முறையை வைத்துதான் பெயர் வைப்பார்கள் அப்படிதான் ஹவாய் ரோலுக்கு பெயர் வைத்துள்ளார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஹைலோ என்ற நகரின் ஹவாய் என பெயர் வைத்ததால் இதை இங்கேயே செய்து கொண்டு ஹவாய் என ஏமாற்றுகிறார்கள் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

Views: - 60

0

0