அமெரிக்க தலைநகரத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய நபர் கைது..! பிடென் பதவியேற்புக்கு முன் பரபரப்பு..!
17 January 2021, 1:45 pmஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடெனின் பதவியேற்புக்கு முன்னதாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் வாஷிங்டன் டி.சி.யில் பதவியேற்பு சோதனைச் சாவடியில் அங்கீகரிக்கப்படாத பதவியேற்பு அழைப்பிதழ், பதிவு செய்யப்படாத கைத்துப்பாக்கி மற்றும் 500’க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுடுவதற்கு தேவையான வெடிமருந்துகளை அவரது காரில் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்லி ஏ பீலர்எனும் அந்த நபர் ஒரு முறையான அனுமதி சீட்டைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அது அவர் நுழைய முயன்ற தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அணுகலை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பட்டியலில் அவரது கடிதம் சரிபார்க்கப்பட்ட பின்னர், வடக்கு கேபிடல் தெரு மற்றும் ஈ ஸ்ட்ரீட் வடமேற்கில் உள்ள கேபிட்டலில் இருந்து அரை மைல் தொலைவில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக அவர் செல்ல மறுக்கப்பட்டார்.
மேலும் பீலர் தனது வாகனத்தில் ஏற்றப்பட்ட க்ளோக் 9 எம்.எம் கைத்துப்பாக்கி, 509 சுற்று வெடிமருந்துகள், 17-சுற்று க்ளோக் மேகஸின் மற்றும் 21 12-கேஜ் ஷாட்கன் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20’ஆம் தேதி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.
கேபிடல் ஹில் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பிடென் பதவியேற்புக்கு முன் இதுபோன்ற வன்முறைகள் நாடு முழுவதும் நடக்கலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஜனவரி 24 வரை அவசரகால நிலையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0