சிறையில் இருந்த போது எனது அறையில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது: நவாஸ் ஷெரிப் மகள் குற்றச்சாட்டு..!!

13 November 2020, 4:40 pm
mariam sherif - updatenews360
Quick Share

சிறையில் இருந்த போது தனது அறையில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரான மரியம் ஷெரிப் குற்றம்சாட்டியுள்ளார்.

பனாமா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகளும் அவரது மருமகன் சப்தர்க்கு ஒராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக நவாப் ஷெரிப் கடந்த ஆண்டு ஜாமின் பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

இதேபோல், அவன்பீல்ட் ஊழல் வழக்கு மற்றும் சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் ஜாமின் பெற்றுள்ள மரியம் ஷெரிப் தற்போது கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது சிறை அனுபவம் பற்றி பேசியிருந்தார்.

தனது சிறை அனுபவங்கள் குறித்து பேசிய மரியம் ஷெரி, நான் இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். நான் ஒரு பெண்ணாக சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றிப் பேசினால், அவர்கள் முகங்களைக் காண்பிக்கும் தைரியம் இருக்காது. அவர்கள் நான் தங்கியிருந்த சிறையிலும் குளியலறையிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியிருந்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரான மரியம் ஷெரிப்பின் இந்தக் குற்றச்சாட்டு அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0