சீனாவில் தற்காப்பு கலை பள்ளியில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 18 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 6:10 pm
China School Fire - Updatenews360
Quick Share

சீனா : மத்திய பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கு இன்று காலை தற்காப்பு கலை பயிற்சிக்காக 34 மாணவ மாணவிகள் வந்துள்ள நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த பல குழந்தைகள் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் அதிகளவில் 7 முதல் 16 வயது உள்ள குழந்தைகள் பலர் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரிப்பதற்காக பள்ளியில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 318

0

0