லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் விபத்து..! விண்ணை முட்டிய கரும்புகை..! பீதியில் உறைந்த மக்கள்..!

10 September 2020, 6:57 pm
beirut_fire_updatenews360
Quick Share

கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்ட மற்றும் பல மைல்கள் வரை கட்டிடத்தை அழித்த லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பெய்ரூட் துறைமுகத்தில் இருந்து இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற, ​​ஆகஸ்ட் 4’ஆம் தேதி ஏற்பட்ட அதிர்ச்சியைக் கடக்க நகரவாசிகள் இன்னமும் முயன்று கொண்டிருக்கையில், இன்று துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெய்ரூட் மக்களை மீண்டும் நிம்மதி இழக்கச் செய்துள்ளது.

ஆரம்ப அறிக்கையின்படி, எண்ணெய் மற்றும் டயர்களின் கடையில் தீ தொடங்கியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. நகர நிர்வாகம் பேரழிவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீயில் இருந்து தீப்பிழம்புகள் வெடிப்பதால் பெய்ரூட்டின் வானம் கறுப்புப் புகையில் மூடியிருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோ மூலம் காண முடிகிறது.

பெய்ரூட் துறைமுகப் பகுதிக்கு அருகே இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பெய்ரூட்டில் வானம் கருமையாகிவிட்டது.

இதற்கிடையில், பெய்ரூட் துறைமுக பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த பல வீடியோக்கள் ட்விட்டரில் வெளிவந்துள்ளன. இது தீ அளவு மற்றும் அது குடியிருப்பாளர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை காட்டுகிறது.

Views: - 0

0

0