இத எல்லாமா சாப்பிடுவாங்க.. ஐரோப்பாவில் இனி புழுவை சாப்பிடலாமாம்!

16 January 2021, 9:16 am
Quick Share

ஐரோப்பாவில் மஞ்சள் புழுக்களை, உணவாக சாப்பிடலாம் என ஐரோப்பா உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. அங்கு உணவாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பூச்சி இனம் இந்த மஞ்சள் புழுக்கள் தான்.

கால்நடை தீவனமாக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப் புழுவை இனி மனிதர்கள் சாப்பிடலாம் என ஐரோப்பா உணவு பாதுகாப்பு அமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இந்த மஞ்சள் புழுக்களில் அதிக புரத சத்து நிரம்பி உள்ளது எனவும், நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்திப்பதாகவும் கூறியுள்ளது. இது மனிதர்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உணவுப் புழுக்கள் தான், ஐரோப்பாவில் மனித உணவாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பூச்சி ஆகும்,

மைக்ரோநியூட்ரிஸ் என்ற பிரெஞ்சு பூச்சி வளர்ப்பு நிறுவனம், இதுகுறித்து அந்த அமைப்பிடம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. அதன் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புழுக்களை வறுத்து, மசாலா தடவி சாப்பிடலாம்; மாவாக்கி அதனை பிஸ்கெட்டுகள், பிரட் மற்றும் பாஸ்தாவின் சேர்த்து சாப்பிடலாமாம். அதுமட்டுமின்றி முழுதாக கூட சாப்பிடலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது,

ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பூச்சிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பர்கர்கள், புழுக்களை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதுபோல, கிரிக்கெட் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவையும் உண்பதற்கு ஏற்றதா என்பதை ஐரோப்பா உணவு பாதுகாப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறதாம்.

ஐரோப்பிய மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் ஆகும் என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். விரைவில் இது சூப்பர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து, 2030 ஆம் ஆண்டில், இது மிகப்பெரிய பிஸ்னஸ் ஆக இருக்குமாம்.. ஐரோப்பிய சந்தையும் ஜெட் வேகத்தில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0