கிரீன்லாந்தில் உருகும் பனிமலை – ஆபத்தில் பூமி..!

21 August 2020, 1:33 pm
Quick Share

பூமி வெப்ப மயம் ஆகாமல் தடுக்க கார்பன் பயன்பாட்டை தவிற்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் காற்று மற்றும் சுற்று சூழல் மாசுபாடுதான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் நவீன மயமாக்கல் மற்றும் கார்பன் பயன்பாடு போன்றவற்றிர்க்குள் அடங்கி உள்ள சூழலில் இயற்கை தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பூமி முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகமாக வெப்ப மயம் ஆகியுள்ள நிலையில் இதன் காரணாக கிரீன்லாந்த் பனி அடுக்குகள் நிமிடத்திற்கு ஒரு மில்லியன் டன் வேகத்தில் உருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 532 பில்லியன் டன் கணக்கிலான பனி அடுக்குகள் கரைந்து கடலில் கலந்துள்ள நிலையில் சுமார் 96 சதவீதம் பனி பாறைகள் உருக ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலின் நீர் மட்டம் மளமளவென உயரும் சூழல் நிலவுவதால் பூமியின் ஏகதேசம் நிலப்பரப்பு கடலுக்குள் அகப்படும் நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மனித குலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தவுள்ள இந்த சூழலுக்கு மனிதர்கள்தான் காரணம் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் பூமி வெப்ப மயம் ஆகாமல் தடுக்க கார்பன் பயன்பாட்டை தவிற்க வேண்டும் எனவும் இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 35

0

0