டிக்டாக்கை வாங்கலாமா, வேண்டாமா…? மைக்ரோசாப்ட் முக்கிய ஆலோசனை
3 August 2020, 10:27 amவாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை வாங்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருவதாக பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சீனாவுக்கு சொந்தமானது டிக் டாக் நிறுவனம். மிகவும் பிரபலமான நிறுவனம். இதை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளர்.
டிரம்ப் அறிவிப்பையடுத்து, மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனம் நாட தொடங்கி உள்ளது. அதன் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி பிரபல மைக்ராசாப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதே நேரத்தில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டால் பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.
இந்த நடவடிக்கைளுக்கு இடையே, டிரம்பை மைக்ரோசாப்ட் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்து முக்கிய விஷயங்கள் பற்றி பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
டிக் டாக்கை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்து மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.