ஓடுபாதையை தவறவிட்டதால் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்: வீரர்கள் உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு

4 July 2021, 10:23 pm
Quick Share

ஓடுபாதையை தவறவிட்டதால் சி-130 ஹெர்குலஸ் என்கிற போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் சி-130 ரக ராணுவ விமானத்தில் வந்தனர். விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்தது. ஆனால், தரையிறங்கும் முயற்சியின்போது ஓடுபாதையை தவறவிட்டதால் விமானம் சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் உடைந்து தீப்பிடித்தது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதப்போகிறது என்பதை உணர்ந்த வீரர்களில் சிலர், அவசரகால வாசல் வழியாக வெளியே குதித்துள்ளனர். பின்னர் விமான தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 29 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனிடையே, 17 பேரை காணவில்லை என்ற நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் சி-130 ஹெர்குலஸ் விமானம் பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் உள்ள விமானப்படைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தளத்திற்கு படை வீரர்கள் அனுப்பவும், பொருட்கள் மற்றும் வாகனங்களை கொண்டு செல்லவும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

Views: - 181

0

0