ஜோ பிடெனின் வேண்டுகோளை ஏற்ற நாசா..! வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்ட நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறிய பாறை..!

22 January 2021, 8:28 pm
nasa_moon_stone_at_white_house_updatenews360
Quick Share

ஜோ பிடன் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், 1972’ஆம் ஆண்டில் நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய பாறையை காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. 

முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக அங்கீகரிக்கும் விதமாக நிலவின் பாறை இப்போது ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் தற்போதைய சந்திரன் முதல் செவ்வாய் கிரக ஆய்வு வரை அனைத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் இருக்கிறது.

“சந்திர மாதிரி 76015,143” ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள சந்திர மாதிரி ஆய்வகத்திலிருந்து வந்தது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா தெரிவித்துள்ளது.

அப்பல்லோ 17 விண்வெளி வீரர் ரொனால்ட் எவன்ஸ் மற்றும் மூன்வாக்கர்ஸ் ஹாரிசன் ஷ்மிட் மற்றும் யூஜின் செர்னன், சந்திரனில் காலடி வைத்த கடைசி மனிதர்கள் ஆவர். இந்த மாதிரியை சந்திரனின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கிலுள்ள வடக்கு மாசிஃப்பின் அடிவாரத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1972’ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட சந்திரனின் இந்த 332 கிராம் துண்டு, 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான மாதிரியாகும். இது நிலவின் அருகாமையில் கடைசியாக பெரிய தாக்க நிகழ்வின் போது உருவாக்கப்பட்டது என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே அடுத்த மனிதனை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது 2024’க்குள் முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனில் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

ஜோ பிடென் பதவியேற்ற நிலையில், டிரம்ப் அரசால் நியமிக்கப்பட்ட நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் அமெரிக்க விண்வெளி அமைப்பின் நிர்வாகி என்ற பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.

தற்போது நாசா நிர்வாகி பணியிடத்தை நிரப்ப ஜனாதிபதி பிடென் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1958’ஆம் ஆண்டில் நாசா நிறுவப்பட்டதிலிருந்து ஆண்களால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0