இரவில் நீல கல்லாக மாறி பிரகாசிக்கும் மர்ம ஏரி… எங்கே இருக்கு?

2 March 2021, 10:33 am
Quick Share

உலகில் பல மர்ம ஏரிகள் இருக்கின்றன. அதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இந்தோனேசியாவில் ஒரு ஏரி இருக்கிறது. பொதுவாக ஏரிகள் அழகு வாய்ந்ததாக சொல்லப்படும். ஆனால் இந்த ஏரியோ அழகுடன் சேர்த்து மிகுந்த அமிலத்தன்மையும் கொண்டது.

ஆம். பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கவாஹா ஈஜென் என்ற பெயர் கொண்ட ஏரி. இந்த ஏரியில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். ஆனால் அந்த நீர் எப்போதும் 200 டிகிரி செல்சியல் வெப்பநிலையிலேயே கொதித்துக் கொண்டே இருக்கும். அதனால் இந்த ஏரியைச் சுற்றி குறிப்பிட்ட தொலைவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், இரவு ஆனதும் அந்த ஏரியின் நீர் பச்சையும் நீலமும் கலந்த நீலக்கல் போல பெயங்கரமாக ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

இந்த ஏரியின் செயற்கைகோள் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படும். பகலில் கொதிக்கும் இந்த ஏரியிலிருந்து இரவில் நீலக்கல் போல பெரும் ஒளி ஏற்படுவதற்கான காரணம் என்ன பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தன. பல வருட ஆராய்ச்சிக்கு பிறகு அதற்கான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கணடுபிடித்தார்கள்.

அந்த ஏரியைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல எரிமலைகள் வெடிக்காமல் உள்ளுக்குள்ளேயே புதைந்திருக்கின்றனவாம். அதனால் அந்த எரிமலைப் பாறைகளில் இருந்து வெளிவரும் ஹைட்ரஜன் குளோரைடு, சல்ப்யூரிக் டை ஆக்சைடு போன்ற பல வாயுக்கள் ஒன்றாக வினைபுரிந்து இரவில் அந்த ஏரிக்கு நீலக்கல் போன்ற ஒளிரும் நிறத்தைக் கொடுக்கிறதாம்.

இந்த ஏரி மிகவும் ஆபத்தானது. ஆராய்ச்சியாளர்களால் கூட சில நிமிடங்களுக்கு மேல் அந்த ஏரியின் அருகில் இருக்க முடியாது. ஒருமுறை ஆய்வு செய்வதற்காக ஒரு தடிமனான அலுமினியத் துண்டை அந்த ஏரிக்குள் விட்டு, 20 நிமிடங்கள் கழித்து அதை வெளியே எடுத்த போது, அந்த அலுமுினியத் துண்டு, சல்லடை போல் மிக மெலிசான துணி போல இருந்ததாம். அந்த ஏரியின் 200 டிகிரி செல்சியல் வெப்பநிலை அந்த அலுமினியத் தாளை அப்படி மாற்றியிருக்கிறது. அவ்வளவு ஆபத்தான அதேசமயம் இரவில் அதிசயிக்கத்தக்க அழகுடனும் இந்த கவாஹா ஈஜென் ஏரி இருக்கிறது.

Views: - 6

0

0