ரோஹிங்கியா முஸ்லீமின் வேட்பு மனுவை நிராகரிப்பு..! மியான்மர் தேர்தல் ஆணையம் அதிரடி..!

13 August 2020, 5:53 pm
rohingya_updatenews360
Quick Share

ஒரு ரோஹிங்கியா முஸ்லீம் மியான்மரின் வரவிருக்கும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாகப் போராடும் உரிமைக் குழுக்கள், இந்த நடவடிக்கையை பாரபட்சமானவை என்றும், துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையின் அறிகுறியாகவும் உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

2017’ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து 7,50,000 ரோஹிங்கியாக்களை நாட்டை விட்டு அண்டை நாடான பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதன் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது மியான்மர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, பயங்கரவாதிகளை வேரறுக்க ஒரு வழிமுறையாக இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருந்தது.

மேலும் தற்போது 6,00,000 ரோஹிங்கியாக்கள் மியான்மரில் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் குடிமக்களாக கருதப்படுவதில்லை. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் இல்லை என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விவரித்துள்ளது.

மூன்று ரோஹிங்கியா தலைமையிலான கட்சிகள் நவம்பர் வாக்கெடுப்பில் குறைந்தது 12 வேட்பாளர்களை நிறுத்துவதாக கூறியிருந்தன என்று பிராந்திய கண்காணிப்புக் குழுவான பார்ட்டிபை ரைட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கட்சியின் உறுப்பினர் அப்துல் ரஷீத், புதன்கிழமை ஏ.எஃப்.பி.க்கு அளித்த பேட்டியில், தனது வேட்புமனுவை ஒரு நாள் முன்னதாக ராக்கைன் மாநில தலைநகர் சிட்வேயில் மாவட்ட தேர்தல் ஆணையம் நிராகரித்ததாக தெரிவித்தார்.

அவர் பிறந்தபோது அவரது பெற்றோர் மியான்மர் குடிமக்கள் அல்ல என்ற காரணத்தினால் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக ரஷீத் கூறினார். அவர் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புஅவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு 1957’ஆம் ஆண்டில் குடியுரிமை வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் வேட்புமனுவை நிராகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்றும், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

Views: - 7

0

0