விரைவில் தேர்தல் நடத்தி ஆட்சியை ஒப்படைக்க முடிவு..! உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்ததா மியான்மர் ராணுவம்..?

1 February 2021, 7:52 pm
myanmar_updatenews360
Quick Share

மியான்மர் இராணுவம் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, மக்களின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) கட்சியின் உயர்மட்ட தலைவர்களை தடுத்து வைத்த பின்னர் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. 

கடந்த நவம்பர் 2020’இல் நடந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் அதிகரித்த பதட்டங்களைத் தொடர்ந்து தற்போது ராணுவம் இந்த முயடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் ஊடகமாக செயல்படும் மியாவடி டிவி, தற்போது வெளியிட்ட ஒரு அறிவிப்பில் மியான்மர் இராணுவம் அவசரகால ஏற்பாடுகளைச் செயல்படுத்தி, விரைவில் ஒரு புதிய தேர்தலை நடத்தும் என்று அறிவித்தது.

தேர்தலில் வெற்றிபெறும் நபரிடம் இராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்கும் என்றும் மியான்மரின் தளபதி அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதால், தேர்தல் நடத்தி ஆட்சியை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தேர்தல் மோசடி காரணமாக நாட்டின் அதிகாரம் இப்போது பாதுகாப்பு சேவைகளின் தளபதி மின் ஆங் ஹேலிங்கிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செயல் தலைவராக ராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள மியான்மரின் முதல் துணை அதிபர் மைன்ட் ஸ்வே இதற்கான அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

இராணுவத்திற்கு சொந்தமான மியாவடி டிவியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பின் படி, மியான்மரில் ஒரு வருட காலத்திற்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடாளுமன்றங்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் சட்டமன்ற செயல்பாடுகள் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0