விண்வெளியில் விவசாயம்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பச்சை மிளகாய்…நாசாவின் புதிய மைல்கல்…!!

Author: Aarthi Sivakumar
23 July 2021, 2:28 pm
Quick Share

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பச்சை மிளகாயை பயிரிட்டு நாசா மீண்டும் சாதனை படைத்துள்ளது.

பூமியை தாண்டி புவிசூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட யாதுமில்லா விண்வெளியில் பயிரை வளர்த்து சாதித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. சூரிய குடும்பத்தின் பிற கோள்களில் குடியேறும் முயற்சியின் ஒரு பகுதியாக பூமிக்கு வெளியே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் மிளகாயை பயிரிட்டு பரிசோதிக்க நாசா முடிவு செய்தது.

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ஒரே நாளில் 61,651 பேர்  பாதிப்பு, 365 பேர் உயிரிழப்பு..!! - Dinakaran

இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.

மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர் தெரிவித்ததாவது, விண்வெளி நிலையத்தில் காரமான மிளகாயை தயாரித்துள்ளோம். மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மையை இந்த பயிரை தேர்வு செய்ததற்கான முக்கிய காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது. நாசாவின் அனுமதி கிடைத்ததும் இந்த மிளகாய் செடிகளை விண்வெளி வீரர்கள் அறுவடை செய்வார்கள். அவர்கள் பயன்படுத்தியது போக எஞ்சிய மிளகாய்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும்.

NASA Created - HISTORY

இதன் மூலம் விண்வெளியில் விளைந்த மிளகாய்க்கும், பூமியில் அறுவடை செய்த மிளகாய்க்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. பூமியை தாண்டி பிற கோள்களையும் காலனியாக துடிக்கும் மனித இனத்தின் ஆராய்ச்சியில் இது முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகள், பழங்களை விண்வெளியில் விளைவிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது.

Views: - 341

1

0