3 மாதத்தில் 350 யானைகள் உயிரிழப்பு..! அதிரவைத்த போட்ஸ்வானா..! இறப்புக்கு காரணம் என்ன..?

2 August 2020, 9:48 pm
Elephant_Mass_Death_UpdateNews360
Quick Share

போட்ஸ்வானாவின் புகழ்பெற்ற ஒகாவாங்கோ டெல்டாவில் மர்மமான முறையில் இறந்த நூற்றுக்கணக்கான யானைகள் இயற்கை நச்சுகளின் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கலாம் என்று வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது.

போட்ஸ்வானா நாடு உலகின் மிகப்பெரிய யானைகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. அங்கு இருக்கும் யானைகளின் எண்ணிக்கை சுமார் 1,30,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 300 பேர் மார்ச் மாதத்திலிருந்து மர்மமான முறையில் இறந்துள்ளன.

ஆன் யானைகளுக்கு இந்த மரணங்கள் ஏற்படவில்லை என்பதால் ஆந்த்ராக்ஸ் தொற்று மற்றும் வேட்டையாடலையும் அரசு அதிகாரிகள் நிராகரித்தனர்.

பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட பூர்வாங்க சோதனைகள் இதுவரை முடிவானவை அல்ல என்றும் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் போட்ஸ்வானாவின் வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறைத் தலைவர் சிரில் தாவோலோ ஒரு பேட்டியில் கூறினார்.

“ஆனால் எங்களுக்கு கிடைத்த சில ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில், இயற்கையாக நிகழும் நச்சுகளை சாத்தியமான காரணியாக நாங்கள் பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார்.

“இன்றுவரை இறப்புக்கான காரணம் என்ன என்ற முடிவை நாங்கள் உறுதியாக கண்டறியவில்லை.” எனத் தெரிவித்தார்.

தேங்கி நிற்கும் நீரில் உள்ள சில பாக்டீரியாக்கள் இயற்கையாகவே விஷத்தை உருவாக்கலாம் எனக் கூறப்படுகிறது.

350’க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளதாக விலங்கு ஆர்வலர்கள் கூறினாலும், 281 யானைகள் இறந்துவிட்டதாக அரசாங்கம் இதுவரை கூறி வருகிறது.

இறப்புகள் முதன்முதலில் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு தொண்டு நிறுவனமான எலிஃபண்ட்ஸ் வித்யூட் பார்டர்ஸ் (ஈ.டபிள்யூ.பி) மூலம் வெளியிடப்பட்டன. இறந்த 356 யானைகளைப் பற்றிய ரகசிய அறிக்கை ஜூலை தொடக்கத்தில் ஊடகங்களுக்கு கசிந்தது.

சுமார் மூன்று மாதங்களாக இந்த பகுதியில் யானைகள் இறந்து கொண்டிருந்ததாக ஈ.டபிள்யூ.பி’யால் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இறப்பு குறிப்பிட்ட வயது மற்றும் ஒரு பாலினத்தில் மட்டும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல யானைகள் பலவீனமாகவும், சோம்பலாகவும், மயக்கமாகவும் தோன்றின என ஈ.டபிள்யூ.பி. தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து தென்னாப்பிரிக்கா, கனடா, ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்காவில் உள்ள சிறப்பு ஆய்வகங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆய்வின் முடிவிலேயே இதற்கான காரணம் என்ன என சரியாக தெரிய வரும்.

Views: - 0

0

0