நவாஸ் ஷெரீப்பின் மருமகனைக் கைது செய்தது இம்ரான் கான் அரசு..! எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க நினைக்கிறதா பாகிஸ்தான்..?

19 October 2020, 7:47 pm
Nawaz_Sharif_Son_In_Law_Arrested_Pakistan_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் இன்று கராச்சியில் உள்ள அவரது ஹோட்டல் அறைக்குள் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரது கணவரும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனுமான ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தரை கைது செய்ததாக குற்றம் சாட்டினார்.

“நான் கராச்சியில் தங்கியிருந்த ஹோட்டலில் எனது அறைக் கதவை உடைத்து கேப்டன் சப்தாரைக் கைது செய்துள்ளார்கள்” என்று கராச்சியில் நடந்த ஒரு பெரிய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மரியம் கூறினார்.

எனினும், பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை சேர்ந்த அமைச்சர் அலி ஜைதி, இதை மறுத்தார்.

“ஹோட்டல் கதவை உடைத்ததாக மரியம் மீண்டும் பொய் சொல்கிறார். 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் இரண்டாவது பேரணிக்கு முன்னர் காயிதின் (பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா) கல்லறையில் கோஷங்களை எழுப்பிய ஒரு நாள் கழித்து அஜீஸ் பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சப்தர் கைது செய்யப்பட்டார். .

சப்தார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயிட் கல்லறையின் புனிதத்தை மீறியதற்காக மரியம், சப்தார் மற்றும் 200 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த கைது செய்யப்பட்டுள்ளது என்று டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் இம்ரான் கான் அரசின் நடவடிக்கைகளால் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இம்ரான் கானை பதவியிலிருந்து வெளியேற்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தை தோற்றுவித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக தொடர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் இம்ரான் அரசு தற்போது நவாஸ் ஷெரீப்பின் மருமகனை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 17

0

0