“கிரேட்டர் நேபாளம்”..! டேராடூன், நைனிடாலையும் உரிமை கோரும் நேபாளம்..! சீன ஆதரவுடன் ஷர்மா ஒலி அடாவடி..!

17 September 2020, 5:15 pm
Greater_Nepal_Controversy_UpdateNews360
Quick Share

தொடர்ந்து இந்தியாவை சீண்டி வரும் நேபாளம், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, நேபாளத்தை ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த நேபாள தேசிய முன்னணியுடன் கைகோர்த்து, ‘கிரேட்டர் நேபாளத்திற்காக’ ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதில் இந்திய நகரங்களான டேராடூன் மற்றும் நைனிடால் போன்றவற்றிற்கான உரிமைகோரல் அடங்கும்.

நேபாள கம்யூனிஸ்டுகள், அதன் கிரேட்டர் நேபாளம் பிரச்சாரத்தில் சட்டவிரோதமாக இந்திய நகரங்களை உரிமை கோருவதோடு, உத்தரகண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளுக்கும் உரிமை கோரியுள்ளனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய கிழக்கிந்திய கம்பெனிக்கும் அப்போதைய நேபாள அரசுக்கும் இடையில் 1816’இல் கையெழுத்திடப்பட்ட சுகாலி நேபாள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, தற்போதைய நேபாள அரசு இந்திய பிரதேசங்களை உரிமை கோருகிறது மற்றும் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

பல நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக ஊடக தளங்களில் கிரேட்டர் நேபாளம் என்ற பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இது இந்திய பிராந்தியங்களை நேபாளத்துடன் இணைக்கக் கோருகிறது.

கே.பி. ஷர்மா ஒலி நேபாளத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கிரேட்டர் நேபாளத்திற்கான தேவை அதிகரித்தது. முன்னதாக, நேபாளமும் 2019 ஏப்ரல் 8’ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் இந்த பிரச்சினையை எழுப்பியிருந்தது.

இந்திய பிராந்தியங்களை நேபாளத்தால் உரிமை கோருவதற்கான சட்டவிரோதமான நடவடிக்கை, இந்தியப் பகுதிகளான லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை அதன் புதிய அரசியல் வரைபடத்தில் சேர்த்த சில மாதங்களிலேயே இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த நேபாளத்தை தூண்டிவிடும் சீனா :
அந்த அறிக்கையின்படி, நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியும் இந்தியாவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க சீனாவிலிருந்து பெரும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு பல மில்லியன் டாலர்களை அளிப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஜெனீவா வங்கிக் கணக்கில் ஒலி ரூ 41.34 கோடியை டெபாசிட் செய்ததாக நேபாளத்தில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சீனாவின் உத்தரவின் பேரில், கடந்த ஜூன் மாதத்தில் நேபாள நாடாளுமன்றம் நாட்டின் அரசியலமைப்பில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய இந்தியப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் வரைபடத்தைப் புதுப்பிப்பதற்கான திருத்தத்தை நிறைவேற்றியது.

அத்தகைய நியாயப்படுத்தப்படாத வரைபடக் கூற்றில் இருந்து விலகி, இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்குமாறு நேபாளத்தை இந்தியா வலியுறுத்தியது. எனினும், நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள எல்லையை இந்திய பிரதேசங்களை உள்ளடக்கி மாற்றியமைக்க போர்க்குணமிக்க வகையில் செயல்பட்டனர்.

Views: - 9

0

0