நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை…! 5 பேர் பலி..! ஏராளமானோர் மாயம்

14 August 2020, 4:10 pm
Quick Share

காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

நேபாளத்தில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

அந்நாட்டின் வடக்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ள லிடிமோ லாமா டோல்,  ஜுகல் கிராம பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  நிலச்சரிவில் பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய 38 பேரை காணவில்லை.  அவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். அந்நாட்டில் தொடர்மழை, நிலச்சரிவுகளால் ஜூலையில் 113 பேர் பலியாகி உள்ளனர்.  காணாமல் போன 38 பேரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 6

0

0