ஆசிட் தாக்குதலா..? இனி இது தான் தண்டனை..! நேபாள அரசு அதிரடி முடிவு..!
26 September 2020, 3:26 pmநேபாளத்தின் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம், ஆசிட் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கான சிறைத் தண்டனையை 20 ஆண்டுகளாக உயர்த்தவும், ஆசிட் விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் இரண்டு அவசர சட்ட வரைவுகளை தயாரித்துள்ளது.
நேபாளத்தில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்கள்.
புதிய சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டால், தாக்குதல் நடத்தியவர்களுக்கு 10,00,000 நேபாள ரூபாய் அபராதத்தையும் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இரண்டு அவசர சட்டங்களையும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சட்டம், நீதி மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அவசர சட்டத்தின் ஷரத்துகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் இறுதி வரைவில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் நேபாள அரசாள வட்டாரங்களில் பேசப்படுகிறது.