ஆப்கான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை: பாக்., அமைச்சர் தகவல்..!!

21 July 2021, 10:24 am
Quick Share

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்கள் விசாரணையில் கிடைக்கவில்லை என்று பகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் மகள் மர்ம நபர்களால் கடத்தி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 27 வயதான சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.‌ கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை சாலையில் விட்டுவிட்டு சென்றனர்.

Imran_khan_UpdateNews360

தனது மகள் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது மனிதாபிமானமற்ற தாக்குதல் என கூறி கண்டித்த தூதர் நஜிப் அலிகேலின், தற்போது தனது மகள் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தங்கள் நாட்டில் தூதர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே ஒரு வழக்கிற்காக ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைக்கக் கூடாது எனவும் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.

Views: - 133

0

0