எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை: வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்…!!!

Author: Aarthi
11 October 2020, 8:00 am
kim jang un - updatenews360
Quick Share

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் பேசியுள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அந்நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரசின் பாதிப்புக்கு ஒருவர் கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோயில் இருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம், இது நம்முடைய கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

தொடர்ந்து பேசிய அவர், வடகொரிய மக்கள் மிகப்பெரிய வெற்றியை சாதித்து இருக்கிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, பின்னர் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என வடகொரியா கூறியது கவனத்தில் கொள்ள வேண்டிய வகையில் உள்ளது.

Views: - 45

0

0