அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : இரு பத்திரிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

Author: Babu Lakshmanan
8 October 2021, 3:46 pm
nobel prize - updatenews360
Quick Share

2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரட்டவ்விற்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிக்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 752

0

0