பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு : 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு தகவல்

Author: Babu Lakshmanan
11 October 2021, 4:04 pm
economic nobel prize - updatenews360
Quick Share

2021ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட், கெய்டோ டபுள்யூ. இம்பென்ஸ் ஆகியே 3 பேருக்கும் இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Views: - 194

0

0

Leave a Reply